திருநெல்வேலி பேராசிரியர் சிவசுவின் மேலும்
இலக்கியஅமைப்பு மற்றும் மேலும் வெளியீட்டகத்தின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும்
தமிழ்இலக்கியத் திறனாய்வுத்துறையில் சிறந்துவிளங்கும் தமிழ்இலக்கியத் திறனாய்வாளருக்கான
மேலும் விருதினை வழங்கிவருகிறது.
2013ல் இவ்விருது இலக்கியத் திறனாய்வாளர்
சண்முகத்திற்கும், 2014 ல் இவ்விருது திறனாய்வாளர் ஜமாலனுக்கும் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான மேலும் இலக்கியத்திறனாய்வாளர் விருது புதுச்சேரியைச் சார்ந்த
தமிழ்இலக்கியத் திறனாய்வாளர் முனைவர் க.பஞ்சாங்கத்திற்கு மேலும் விருதுடன் ரூ
25000 பணமுடிப்பு 5.7.15 அன்று மாலை 4.30 மணிக்கு சென்னை எக்மோரில் உள்ள இக்க்ஷா
மையத்தில் வழங்கப்படுகிறது.
முனைவர் க.பஞ்சாங்கம்,விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையத்திற்கு அருகிலுள்ள புத்தூரில் பிறந்தவர். சிலப்பதிகாரத் திறனாய்வுகள்
என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை நிகழ்த்தியவர்.திருநெல்வேலி மாவட்டம்
சங்கரன்கோவிலில் உள்ள பி.எம்.டி.கல்லூரியில் ஆசிரியப்பணியைத் தொடங்கி புதுவையில்
தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிப் பணிநிறைவடைந்துள்ளார்.
ஓட்டுப்புல் எனும்
கவிதைத்தொகுதி இவரின் முதல் நூல். சாகித்திய அகாதெமி அமைப்பின் உறுப்பினராக
நான்காண்டுகள் செயல்பட்டுள்ளார். தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு,நவீனக்
கவிதையியல்: எடுத்துரைப்பியல், தொன்மத்திறனாய்வு, மனோன்மணியமும்
பின்காலனித்துவமும், மறுவாசிப்பில் கி.ரா.போன்ற குறிப்பிடத்தக்க நூல்களைத்
தமிழுக்குத் தந்தவர். புதிய கோட்பாட்டு நோக்கில் சங்கஇலக்கியம் இவர் எழுதிய
முப்பத்துமூன்றாம் நூல்.
விருது வழங்கும் விழா
இந்த ஆண்டுக்கான மேலும் இலக்கியத்திறனாய்வாளர்
விருது புதுச்சேரியைச் சார்ந்த தமிழ்இலக்கியத் திறனாய்வாளர் முனைவர்
க.பஞ்சாங்கத்திற்கு 5.7.15 அன்று மாலை 4.30 மணிக்கு சென்னை எக்மோரில் உள்ள இக்க்ஷா
மையத்தில் வழங்கப்படுகிறது. பேராசிரியர் மேலும் சிவசுவின் அறிமுகத்தோடு நிகழ்ச்சி
தொடங்கும்.பேராசிரியர் தமிழவன் முதன்மை உரைநிகழ்ச்சியின் நெறியாளராக
உரையாற்றுகிறார். துறைபொருள் வெளி எனும் தலைப்பில் நாகார்ஜூனன்
உரையாற்றுகிறார்.எஸ்.சண்முகம்,மூபின்
சாதிகா,நடராஜன்,கணேஷ்ராம்,பார்த்திபராஜா,வெளி.ரங்கராஜன்,திருநாவுக்கரசு, மனோ.மோகன்
ஆகியோர் எதிர்வினையாற்றுகிறார்கள்.
விருது வழங்கும் நிகழ்ச்சியின் நெறியாளராக
ஆர்.சிவக்குமார் பங்கேற்கிறார்.
சிவசு விருதுத் தேர்வுரையாற்றுகிறார்.இன்றைய
கல்விச்சூழலும் நவீன இலக்கியமும் என்ற தலைப்பில் ரா.ஜெயராமனும், விமர்சகர்
க.பஞ்சுவின் படைப்புகள் என்ற தலைப்பில் பாரதிபுத்திரனும், சண்முக.விமல்குமார்
என்கிற இளம் இலக்கிய ஆளுமை அறிமுகம் எனும் தலைப்பில் சௌந்தர மகாதேவனும் உரையாற்றுகின்றனர்.
மேலும்
இலக்கியத்திறனாய்வாளர் விருதினை முனைவர் க.பஞ்சாங்கத்திற்கும்,இளம் இலக்கிய ஆளுமை
விருதினை சண்முக.விமல்குமாருக்கும் மேலும் இலக்கிய அமைப்பு வழங்குகிறது. இருவரின்
ஏற்புரையோடு விழா நிறைவடைகிறது.இத்தகவலை மேலும் அமைப்பின் நிறுவனர்
சிவசு,அமைப்பின் செயலாளர் சௌந்தர மகாதேவன் ஆகியோர் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளனர்.
முனைவர் சௌந்தர
மகாதேவன்
No comments:
Post a Comment