Friday, March 28, 2014

''மேலும்'' சிவசு நிறுவியுள்ள தமிழ் இலக்கிய விமர்சன விருது:பரிசளிப்பு விழா



அறுபத்துநான்கு வயதில் தன் சொந்தப் பணத்தில் ரூ .25,000 தந்து ''மேலும்''  தமிழ் இலக்கிய விமர்சன விருதினைத்  தொடங்கி உள்ளார்  
.
மேலும் அமைப்பின் முதல் இலக்கிய விமர்சன விருது சென்னையைச் சார்ந்த இலக்கிய விமர்சகர் திரு .எஸ் .சண்முகம் அவர்களுக்கு நெல்லையில் நடைபெற்ற விழாவில் மூத்த திறனாய்வாளர்  தி ..சி .வழங்கிப் பாராட்டினார் 

விருதுபெற்ற சண்முகம் அனுப்பிய ஏற்புரையை பேராசிரியர் சிவசு தொகுத்து வழங்கினார்.

விழாவுக்கு சிற்றேடு இதழின் கெüரவ ஆசிரியர் கர்நாடகத்தைச் சேர்ந்த தமிழவன் தலைமை வகித்தார். திராவிட இயக்கமும், நாடகக் கலகமும் என்ற தலைப்பில் மு. ராமசாமி இலக்கிய உரையாற்றினார். 

விமர்சனப் போக்குகள் என்பது குறித்து மலையாள கலாகெüமுதி இதழின் பிரபல பத்தி எழுத்தாளர் ஹரிகுமார் உரையாற்றினார்.


ஈரோட்டைச் சேர்ந்த ப. சுடலைமணி, ஆந்திரத்தைச் சேர்ந்த நிதா எழிலரசி கவிதை வாசித்தனர். சிற்றேடு இதழின் பிரதியை தி.க. சிவசங்கரன் வெளியிட்டார்.  

முனைவர்கள் கணேஷ், வேலம்மாள், கலாவதி பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.

 
"மேலும்' இலக்கிய அமைப்பின் தலைவர் முனைவர் வே. கட்டளை கைலாசம் வரவேற்றார். ச. மகாதேவன் நன்றி கூறினார்.



No comments:

Post a Comment